கல்யாண சுந்தரம்

img

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மனைவி கௌரவாம்பாள் காலமானார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மனைவி கௌரவாம்பாள்(79) புதனன்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான்காடு கிராமத்தில் வசித்து வந்த மக்கள் கவிஞரின் மனைவி கௌரவாம்பாள் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.